தனுஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இவர்களின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்ததால் பல திரைப்பிரபலங்கள் இவர்களை பாராட்டி இறந்தார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ஜகமே தந்திரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் இத்திரைப்படத்தை ஓடிடி வழியாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் தனுஷிற்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் கூட திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ரகிட ரகிட பாடல் மற்றும் புஜ்ஜி பாடல் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் உள்ளூரில் மிகவும் கெத்தாக இருந்து வரும் ஒரு டான் எப்படி உலக அளவில் டானாக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட் பிலிம்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது இதற்கான புரமோஷன் வேலைகளும் தொடங்கியுள்ளார்கள். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த இரண்டு பாடல்களை தொடர்ந்து மூன்றாவதாக தனுஷ் எழுதி பாடிய நேத்து என்ற பாடலை நாளை வெளியிட இருக்கிறார்கள். அந்த வகையில் இப்பாடலின் போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள்.