மிகுந்த மன உளைச்சலில் நடிகர் தனுஷ்..! இந்தத் திரைப்படத்திலாவுது வெற்றி கிடைக்குமா..?

dhanush-1

தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல்வேறு கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளான ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் தான் ஏனெனில் இவர் அறிமுகமான பொழுது பல்வேறு பிரபலங்களும் இவரை பார்த்து நீங்கள் எல்லாம் ஒரு ஹீரோவா என விமர்சித்த காலம் உண்டு.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது தமிழ் தெலுங்கு ஹிந்தி ஏன் ஹாலிவுட் திரைப்படத்திலும் கூட தன்னுடைய கைவரிசையை காட்டி வருகிறார்.

ஆனால் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சரியான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமையாத காரணத்தினால் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தின் கதையில் மிக அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறாராம்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரபல நடிகை சம்யுக்தா நடித்த வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை பிரபல என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இதற்கு ஜி வி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைக்கிறார்.

மேலும் நடிகர் தனுஷின் பிறந்தநாள் நாளை என்பதன் காரணமாக இதனை தொடர்ந்து வாத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளார்கள் அந்த வகையில் தனுஷ் பல்வேறு யோசனையில் உள்ளாராம் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டீசர் கூட நாளை வெளியிட உள்ளார்கள்.

vathi
vathi

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் ஆனாது தனுஷுக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் பலரும் யோசனையில் இருப்பது மட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பில்  ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.