தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் பாடல் ஆசிரியராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் சமயத்தில் எந்த ஒரு ஹிட்டான திரைப்படத்தையும் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம், மாறன் ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் அளவுக்கு கவர முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் நமது நடிகர் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்திற்கு அதிக அளவில் ப்ரோமோஷன் செய்ய முடியவில்லை.
இவ்வாறு தொடர்ந்து சினிமா துறையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் சறுக்கலை சந்தித்து வருகிறார் அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய ஆசையை மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் வொண்டர் பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை மிக பிரமாண்டமாக நடத்தி வந்தார் இந்த நிறுவனத்தின் மூலமாக எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, விசாரணை, காலா போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்து மாபெரும் வெற்றி கொண்டது மட்டுமில்லாமல் கடைசியாக மாறி இரண்டாம் பாகத்தையும் அவரே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் அந்த பாடல் உடன் சேர்ந்து அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.