சினிமா உலகில் வெற்றியை கண்டு முன்னணி நடிகர்களாக ஓடும் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களில் ஒரு காட்சியிலாவது வந்துவிட முடியாது என இளம் நடிகர்-நடிகைகள் ஏங்குவது வழக்கம் ஆனால் ஒரு சில இளம் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விடுவது வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம். விஜய் காதல் மன்னனாக இருந்து பின் ஆக்ஷனில் இறங்கிய முதல் படம் பகவதி இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்து அறிமுகமாகி இருப்பாரு.
உண்மையில் சொல்லப்போனால் தளபதி விஜய்க்கு தம்பியாக முதலில் படக்குழு நடிக்க வைக்க நடிகர் தனுஷை தான் அணுகி உள்ளது. ஆனால் நடிகர் தனுஷ் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என ஒத்த காலில் நீக்கவே பின் பகவதி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க வேண்டிய சூழல் அமைந்தாம்.
உண்மையில் சொல்லப்போனால் பகவதி திரைப்படத்தில் தனுஷ் விஜய்க்கு தம்பியாக நடித்து இருந்தால் அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்பை அள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக விரைவிலேயே அவர் முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கலாம் ஆனால் எது எப்படியோ இப்பொழுது அவர் உச்ச நட்சத்திரமாக தான் இருக்கிறார் ஆனால் சற்று லேட்டாக வந்து விட்டார் என ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
பகவதி படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் நடிகர் தனுஷ் அவர்கள் வெகு விரைவிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் பிரபலமடைந்து அதிக ரசிகர் பட்டாளத்தையும் வைதத்திருக்கலாம் மேலும் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரமாக மாறி இருப்பார் என கூறி வருகின்றனர்.