இளைய தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் செய்யப்போகும் வேலை என்ன தெரியுமா அது.?

dhanush-and-vijay

இளையதளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது பீஸ்ட் திரைப்படம் தான் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி பல கோடி வசூல் செய்து விட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் கோலமாவு கோகிலா,டாக்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றதால் இந்த திரைப்படம் எப்போது முடிவடையும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் ஸ்டைலில் ஒரு புதிய பாடல் உருவாகியுள்ளதாம் இந்த பாடல் இந்த மாதம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாட உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.ஆம் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவராவார் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நேரத்தில் இவரும் ஒரு சில திரைப்படங்களில் நல்ல நல்ல பாடல்களை பாடியுள்ளார்.

dhanush
dhanush

இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் போல் பாட உள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி இருதரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இதை தான் கூறி வருகிறார்களாம்.