ஒரே நேரத்தில் 9 முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்..! முழு லிஸ்ட் இதோ..!

dhanush-1
dhanush-1

திரை உலகின் ஆரம்ப காலகட்டத்தில் அறிமுகமான பொழுது தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்துவந்த  நடிகர் தனுஷ் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தவிர்க்கமுடியாத நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

பொதுவாக வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியிடும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் ஆனால் தற்போது விஜய் சேதுபதியை  ஓவர்டேக் செய்யும் அளவிற்கு அதிக அளவு திரைப்படங்களில் நடித்து வர முன்வந்துள்ளார் நடிகர் தனுஷ்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருவது மட்டுமின்றி தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு திரைப்படம்  நடிக்க தேர்வானது தமிழ் சினிமாவிற்கு பெருமை வாய்ந்த விஷயமாக அமைந்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் தற்போது தனுஷிற்கு இருக்கும் பட வாய்ப்பை பார்த்தால் அடுத்த வருடம் தனுஷ் நடிப்பில் மாதத்திற்கு ஒரு திரைப்படம் வெளி வந்தால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு பட வாய்ப்பு அவருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்சமயம் தனுஷ் நடிப்பில் மாறன் திருச்சிற்றம்பலம் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன், ரூசோ பிரதர்ஸ், செல்வராகவன், வெங்கி, சேகர் கம்முலா, ராம்குமார், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என கிட்டத்தட்ட ஒன்பது இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.