ஹாலிவுட்டில் மரண ஹிட்டடித்த பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்.!

dhanush
dhanush

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தனுஷ் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம்.

அடுத்த திரைப்படத்தை இயக்கும் அவெஞ்சர்ஸ் இயக்குனர் அந்தத் திரைப்படத்தில் 4 ஹீரோக்களை நடிக்க வைக்கிறாராம் அதில் ஒரு ஹீரோ தான் தனுஷ்.

dhanush
dhanush

அவெஞ்சர்ஸ் இயக்குனர் அடுத்ததாக இயக்கப்போகும் படத்தின் பெயர்  ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் தான் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் வழியாக உருவாக்கப்பட உள்ளது.

’தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்தின் நான்கு ஹீரோக்கள் யார் என்று கேட்டால் முதலாக தனுஷ் மற்றும் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகிய நால்வரும் அந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

dhanush
dhanush

தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட்டில் The Extraordinary Journey of the Fakir என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனையடுத்து மறுபடியும் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார்.

தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்க போவதற்கு வாழ்த்துக்களை கூறும் வகையில் ஹாலிவுட்டில் உள்ள பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்.