நடிகர் தனுஷ் திரையுலகில் கொடுத்த “தோல்வி படங்கள்” இத்தனையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் செம்ம சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க கேப்டன் மில்லர்..

திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது. தமிழில் எப்படி பட வாய்ப்பை அள்ளுகிறாரோ.. அதே போல பிற மொழிகளிலும் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் ஹாலிவுட்,  ஹிந்தி போன்ற படங்களிலும் இவர் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். திரையுலகில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கண்டு வரும் இவர் தற்பொழுது நிஜ வாழ்க்கையில் சரிவை சந்தித்துள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர். தனது குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்துள்ளனர்.  இதனால் தனுஷ்  இனி நமக்கு சினிமாதான் எல்லாம் என கருதி படங்களில் நடிப்பது, தயாரிப்பதுமாக இருந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில்   நடிகர் தனுஷ் திரையுலகில் கொடுத்த தோல்வி படங்கள் பத்தி தான் பார்க்கஇருகிறோம்.. 1. புதுக்கோட்டையில் இருந்து சரவணன், 2. சுள்ளான், 3. ட்ரீம்ஸ், 4. அது ஒரு கனாக்காலம் 5. பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், 6. மாப்பிள்ளை, 7. நய்யாண்டி, 8. தொடரி, 9. என்னை நோக்கி பாயும் தோட்டா, 10. The extraordinary joundary of the fakir..