நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வளம் வருகிறார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் அதிக வசூலை அள்ளவில்லை என்றாலும் ஆனால் தேசிய விருது பெரும் அளவிற்கு சிறப்பான கதைஅம்சம் அமைந்த படமாக இருக்கும். அந்த வகையில் இவரது வட சென்னை, கர்ணன், அசுரன் போன்ற படங்கள் மக்கள் பலருக்கும் பிடித்த படமாக அமைந்தன.
தற்போது தனுஷ் கையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதில் முதல் படமாக மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இதற்கு முன் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவான உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்களும் மக்களுக்கு பிடித்த படமாக இருந்தது.
அதுபோல் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் உருவான திருச்சிற்றம்பலம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூலையும் அள்ளி வருகின்றன. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் மித்ரன் ஜவகர் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான உத்தமபுத்திரன் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து காமெடி நடிகராக விவேக் ஏட்டு ஏகாமரம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது ஒரு பேட்டியில் விவேக் பேசியது உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஜவகர் ஒரு அற்புதமான இயக்குனர் அவர் மறுபடியும்..
தனுஷ்கே ஒரு பெரிய பிராஜெக்ட் கொடுத்து இருவரும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் விவேக் பேசிய அந்த செயலை தற்போது தனுஷ் மற்றும் மித்ரன் ஜவகர் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.