முதல் முறையாக தனது முதல் காதல் பற்றி வாயைத்திறந்த தனுஷ்.!! காதல்னா சும்மாவா.!! வைரலாகும் புகைப்படம்.

dhanush

actor dhanush first love photo viral : தமிழ் சினிமா துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான தனுஷ். ஆரம்பத்தில் ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படம் வெற்றியின் காரணமாக அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். அதன்பிறகு தனது அண்ணன் செல்வராகவன் மூலம் ‘புதுப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

நடிகர் தனுஷ் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் இந்தியில் நடித்துள்ள அட்ராகிரே எனும் படம் தற்போது மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதனை தொடர்ந்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 மாதங்களாக படம் எடுக்கவில்லை என்றும், என்னுடைய முதல் காதலும், உண்மையான காதலும் இதுவே என்று கூறி கேமராவை கட்டிப் பிடித்த மாதிரி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால் தனுஷ் சினிமாவைத்தான் காதலிக்கிறார் என்று ரசிகர்கள் வாகை சூடுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

dhanush-1
dhanush-1