Actor Dhanush: நடிகைக்காக 15 பச்சை மிளாகாய்யை சாப்பிட்ட தனுஷ்.! பல வருடம் கழித்து வெளியான உண்மை தகவல்..

actor dhanush
actor dhanush

Actor Dhanush: ஒவ்வொரு படத்திற்கும் தனது தனி ஸ்டைலில் வித்தியாசம் காண்பித்து வரும் தனுஷ் ஒரு காட்சிக்காக மட்டும் 15 பச்சை மிளகாய் கடித்து சாப்பிட்டு இருக்கும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பாஸ்டர் ஹிட் பெற்று வருகிறது.

மேலும் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது கடின உழைப்பை செலுத்தி வருகிறார். அப்படி கடைசியாக இவன் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் இவருடைய கெட்ட பெரிதளவிலும் பேசப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது இவருடைய நடிப்பில் வருகின்ற 12ஆம் தேதி அன்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டர் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் கேப்டன் மில்லர் படத்தினை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தேவதையை கண்டேன்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி நடித்திருந்தார். பூபதி பாண்டியன் இயக்க பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படத்தில் ஒரு காட்சியில் ஸ்ரீதேவிக்காக யார் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற போட்டி நடைபெறும் அதில் அதிக பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும்.

அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ விசில் அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்

இதில் உண்மையான பச்சை மிளகாய் சாப்பிடலாம் என்று தனுஷ் கூற அந்த ஒரே ஷாட்டில் சுமார் 15 பச்சை மிளகாயை தனுஷ் கடித்து சாப்பிட்டுள்ளார். இவ்வாறு தனுஷின் அர்ப்பணிப்பு தான் அவரை முன்னணி ஹீரோவாக மாற வைத்துள்ளது என அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.வி பன்னீர்செல்வம் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.