தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் நானே வருவேன் திருச்சிற்றம்பலம் வாத்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
ஆனால் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் தனுஷ் கமிட்டாகி உள்ளதாக தெரியவந்துள்ளது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி சாணி காகிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இந்நிலையில் மேலும் நமது இயக்குனர் தனுஷுடன் தற்சமயம் கூட்டணி வைத்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் அவர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகவில்லை.
ஆனால் இப்படி ஒரு கூட்டணி உருவாகினால் கண்டிப்பாக படம் மெகா ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பது மட்டுமில்லாமல் ஆவலுடன் இருக்கிறார்கள் மேலும் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் ஆனது இணையத்தில் வெளியானதன் காரணமாக கண்டிப்பாக இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் தனுஷ் நடிப்பில் உருவான தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் ஆனது வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.