ரஜினி, திரிஷா, சசிகுமார் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு துணை நடிகையாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். துணை நடிகையாக அறிமுகமான இவருக்கு தமிழில் இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இறுதியாக விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் பிரமாண்டமாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் மாளவிகா மோகனனும் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமான இவர் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவது போலவே உங்களுடன் நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார். அதற்கு தனுஷ் கண்டிப்பாக விரைவில் என்னுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கலாம் என்று பதிலளித்திருந்தார்.
தனுஷ் கூறியது போலவே இவரின் 43ஆவது திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் தான் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தினை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக வெயிட் பண்ணி வரும் மாளவிகா கூறியிருந்தார். முதற்கட்ட படத்தின் படப்பிடிப்பின்போது தனுசுடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பினை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.
அதில் தனுஷ் என்னை செல்லமாக மால்மோ என்று அழைப்பார் என்றும் மீதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாலு என்று அழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் கேட்கும் பொழுது சும்மா கிக்கா இருக்கு என்று கூறி வருகிறார்கள்.