தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் போன்ற சினிமாவில் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களான அசுரன், கர்ணன் இந்த இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் வேற லெவல் நடிகராக மாறி உள்ளார். அந்த வகையில் மூன்று வருடங்களில் ஒன்பது திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் ஹோலிவுட்டில் த கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் நிறுவனம் இயக்குகிறது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனென்றால் இத்திரைப்படத்தின் பொழுது தனுஷின் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதாலுக் அதில் தனுஷ் மாஸாக உள்ளதாலும் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.
அந்த வகையில் தனுஷ் அமெரிக்காவிற்கு தனது குடும்பத்துடன் சென்று உள்ளார். அவ்வப்போது தனது மனைவியுடன் போட்டில் செல்லும் பொழுது தனுஷ் ஐஸ்வர்யாவை எடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.