தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் தனுஷ். இவரின் கடின உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் தற்பொழுது சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது தனுஷ் மற்ற நடிகர்களை விடவும் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். அதோடு சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அதோடு இருக்க இருக்க இவரின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு இந்த திரைப்படங்கள் தனுஷின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு பிறகுதான் ஏராளமான திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் ஹோலிவுட்டில் த கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் ஜகமே தந்திரம் திரைப்படம் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படம் உலக முழுவதும் பாராட்டுக்குரியது திரைப்படமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிரபலமடைந்துள்ளது தனுஷ் அடுத்த மூன்று வருடங்களுக்கு 9 திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் அமிதாபச்சன் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ஷமிதாப். இத்திரைப்படத்தை பால்கியின் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார். அந்த வகையில் பிரபல இயக்குனரான பால்கி உடன் இணைய நடிகர் துல்கர் சல்மான் ஆசைப்படுகிறாராம்.
இவர் துல்கர் சல்மானும் தனுஷை போலவே தெலுங்கு, மலையாளத்தில் ஒரு முன்னணி நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து பிரபலமடைந்தவர் தமிழில் கூட கடந்தாண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இயக்குனர் பால்கியிடம் துல்கர் சல்மானை வைத்து திரைப்படம் இயக்க உள்ளாராம் அதனால் தனுஷ் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.