நடிகர் தனுஷ் சினிமாவில் பல சிறப்பான படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக இருந்து வருகின்றன. தனுஷ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.
அண்மையில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கண்டு வருகின்றனர் மற்றும் வசூலும் எதிர்பாராத அளவு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தான் நடித்த மூணு திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
3 படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்தது இதை தொடர்ந்து அடுத்தடுத்து அனிருத் பல டாப் நடிகர்களின் படங்களில் இணைந்து இசையமைத்து வந்தார். இருந்தாலும் அனிருத் மற்றும் தனுஷ் இணையும்போது எப்பொழுதுமே சிறந்த கூட்டணியாக இருக்கும் அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து மூணு, வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருந்தனர்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு கூட அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஆடியோ லான்சில் கூட தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து மேடையில் பாடல் பாடி மக்களை மகிழ்வித்தனர். அப்பொழுது தனுஷ் அனிருத் பற்றி மிகப் பெருமையாக பல விஷயங்களை கூறியிருந்தார்.
மற்றும் என்னுடைய இன்னொரு மகன் அனிருத் என்று கூட தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் அனிருத்துடன் இணைந்து விஜய் ஜேசுதாஷூம் இருக்கிறார்.