பிரஸ் மீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் கவர்ச்சி குயினை முத்தம் மழையில் நனைத்த கூல் சுரேஷ்.!

cool-suresh-1
cool-suresh-1

ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் கூல் சுரேஷ். இவர் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஏனென்றால் எந்த புதிய திரைப்படம் வெளிவந்தாலும் இவரிடம் அந்த படத்தினை பற்றி விமர்சனம் கேட்பதை பத்திரிக்கையாளர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

எனவே சில யூடியூப் சேனல்கள் அவரைப் பார்த்தாலே மைக்கை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். எந்த ஒரு பயமும் இன்றி  தொடர்ந்து பல விமர்சனங்களை செய்து வரும் ஸ்கூல் சுரேஷ் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி குயின் ஒருவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு முத்த மழையில் நனைய வைத்துள்ளார் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கூல் சுரேஷ் பொதுவாக பெண்களிடம் நெருக்கமாக பழகுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் பேட்டியின் பொழுது பக்கத்தில் ஏதாவது பெண் இருந்தால் அவரின் மீது கையை போடுவது கன்னத்தைப் பிடித்துக் கொள்வது போன்றவற்றை செய்து வருவதால் பலரும் அவரை விட்டு தள்ளி போவார்கள் ஆனால் இந்த முறை சாக்ஷி அகர்வால் ஆவரிடம் வசமாக மாட்டி உள்ளார்.

அதாவது நடிகை சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘நான் கடவுள் இல்லை’ என்ற திரைப்படம் நேற்று ரிலீசானது. எனவே பிரீமியர் ஷோவை நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து பார்த்த கூல் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் படம் குறித்து புகழ்ந்து தள்ளி நல்ல விமர்சனத்தை தந்தார். அந்த நேரத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் அவருடைய அருகில் நின்றதால் அவர் தோள் மீது கையை போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.

cool suresh
cool suresh

பிறகு அப்பொழுது யாரும் எதிர்ப்பாராத வகையில் திடீரென சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுக்கிறார் கூல் சுரேஷ் அனைவரும் திடீரென இதனை பார்த்து அதிர்ச்சி அடைய தன்னுடைய ஸ்டைலில் அதனை சமாளித்து விடுகிறார். இதற்கு முன்பு யாஷிகாவுடன் கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டி இணையதளத்தில் வைரலான நிலையில் தற்போது சாக்ஷிக்கு முத்தமே கொடுத்ததால் சாக்ஷியின் ரசிகர்கள் கூல் சுரேஷ் எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்னதான் இருந்தாலும் இப்படி பிரஸ்மீட்டின் பொழுது ஒருவரின் அனுமதி இன்றி முத்தம் கொடுப்பது மிகவும் தவறான ஒன்று.