ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பரத். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் இவர் மற்ற நடிகர்களை விடவும் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் காதல் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படம் ஒரு பணக்கார பெண்ணை ஒரு ஏழை பையன் காதலித்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் நடக்கும் என்பதை தத்ரூபமாக காட்டியிருந்தார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு போன்றவற்றிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து வில்லனாகவும் சில படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். இவ்வாறு இவரின் நடிப்பு திறமையினால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து இருந்தாலும் சினிமாவில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
இதன் காரணமாக தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ட்டுவின்ஸ் குழந்தைகள் பிறந்தது. இரண்டும் ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் குழந்தைகளின் புகைப்படமும் இணையதளத்தில் வெளிவந்து வைரலானது. இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் எங்கும் போக முடியாது எனவே பரத் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் தனது இரு மகன்களையும் வைத்துதான் இவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.