தனது மகனை வைத்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நடிகர் பரத்.! வைரலாகும் வீடியோ

bharath
bharath

காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் பரத் இவர் இதற்கு முன்பு பாய்ஸ் என்ற படத்தில் பாபு என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக உருவம் எடுத்தார்.

இவ்வாறு ஏராள திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் அவரது படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை இந்நிலையில் காளிதாஸ் என்ற திரைப்படத்தில் பரத் நடித்த போது ரசிகர்களின் மத்தியில் உச்சத்தில் புகழ்பெற்று விளங்கினார்.

தற்போதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்து வரும் இந்த திரைப்படங்கள் இவரது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற இருக்கிறது.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் வெப் சீரியஸ் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்த இருக்கிறது இந்நிலையில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு பரத்தின் மகன் ஜேடன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

அப்பொழுது அந்த வீடியோவை எடுத்த பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இவர் பகிர்ந்த இந்த வீடியோ காணொளி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.