தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை உலகிற்கே தெரிந்த விஷயம்தான். தாடி பாலாஜியின் மனைவிதான் நித்யா இந்த தம்பதிகளுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார் தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும் இணைந்து ஒன்றாக நடனம் ஆடியபோது இவர்களின் குடும்ப பிரச்சனை வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.
அதன்பிறகு இருவரும் அடிக்கடி போலீஸ் கோர்ட் என அடிக்கடி சென்று குடும்ப மானத்தை கப்பல் ஏற்றி விட்டார்கள். இவர்களின் சண்டை சமூக வலைதளத்திலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் இணைந்து விட்டது போல் விஜய் டிவியில் காட்டினார்கள் ஆனால் இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும் போஷிகா அவரின் அம்மா நித்யாவுடன் வாழ்ந்து வருகிறார்.
நித்தியா தற்பொழுது மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம் நித்தியா. நித்யா பள்ளியில் மட்டும் பணி புரியாமல் இதற்கு முன்பு ஐடி-யிலும் மிகப்பெரிய கம்பெனியில் பணி புரிந்தவர். அதுமட்டுமில்லாமல் அந்த வேலைக்கு பிறகு பிரபல மருத்துவமனையில் HR அதிகாரியாக பணியாற்றி வந்தார் தாடி பாலாஜி திருமணம் செய்துகொண்ட பிறகு அந்த வேலையை விட்டுவிட்டார்.
தற்பொழுது தனியாக தன் சொந்த காலில் நின்று தனது மகளை வளர்த்து வருகிறார். அவர்களின் குடும்ப பிரச்சனை எப்பொழுது முடியும் என்று தெரியவில்லை பாலாஜி தன் மக்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் இதுவரை எதுவும் செய்யவில்லை. பள்ளிகள் திறப்பது மிகவும் கடினம் என்பதால் நித்தியா மறுபடியும் வேலைக்கு போக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நித்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் நித்யா செம மாடலாக வலம் வருகிறார்.