இயக்குனர் சிறுத்தை சிவா தம்பியும் நடிகருமான பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் பாலா.
இவர் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி உள்ளார். மேலும் இவர் அஜித் உடன் இணைந்து வீரம் திரைப்படத்தில் அவருடைய தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு பெரிதாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலா பின்னனி பாடகி அம்ருதாவை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் இவர்களுக்கு அவந்திக்கா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இவ்வாறு இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் ஒரு கட்டத்தில் விவாகரத்தும் செய்து கொண்ட நிலையில் எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் எனவே இவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியான நிலையில் இதனை அடுத்து நடிகர் பாலா அவரது மனைவி தங்களுடைய இரண்டாவது திருமணம் ஆண்டை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை இருப்பதாகவும் அந்த சிகிச்சையினால் மரணம் கூட நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் எனக்காக இத்தனை காலம் பிரார்த்தனை செய்து வந்த என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார். மேலும் நான் இறந்து விட்டால் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று பாலா அவருடைய மனைவியிடம் தெரிவித்தார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பாலாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.