தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் வீரம் இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது நடிகர் பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான பாலா பிறகு 2003ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து காதல் கிசுகிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிறகு இவருக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றதால் அடுத்தடுத்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அந்த வகையில் மலையாளத்தில் ஹீரோவாகவும், குணசேத்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா அண்ணனான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் அஜித்துடன் இணைந்து வீரம், ரஜினியின் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மேலும் கார்த்திக் நடிப்பில் வெளியான தம்பி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படத்தையும் தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறத் தொடங்கினார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மலையாள பாடகி அமிருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டு பிரிந்தனர். பிறகு பாலா 2021ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் பாலாவுக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய தம்பியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள இயக்குனர் சிறுத்தை சிவா தற்பொழுது மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.