Actor Ashok selvan: நடிகர் அசோக் செல்வனுக்கும் பிரபல நடிகரின் மகளான வாரிசு நடிகைக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வெளியான தெகிடி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க தொடர்ந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது. எனவே ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது ஆக்சிஜன், நிஜமெல்லாம் காதல், ஜாக், ரெட் மரம் உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் அசோக் செல்வன் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.
கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதன் அடுத்து தும்பா படத்தில் நடித்திருந்தார். மேலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சில வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி அன்று நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இணையதளத்தில் செய்தி வைரலாகி வருகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.