தனது ஒரே படத்தில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களையும் வளைத்துப்போட்ட அசோக் செல்வன்.! யாருடா சாமி இவரு..

Ashokselvan

தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இவர் பெரும்பாலும் கதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி நடிகைகளும் நடிக்கவுள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக அசோக் செல்வன் கொடுத்து வைத்தவன் என கூறி வருகிறார்கள். ஏனென்றால் ஒரு ஹீரோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள ஃபேவரிட் நடிகையுடன் நடித்தாலே அவர் கொடுத்து வைத்தவர் ஆனால் இவர் இரண்டுக்கு மூன்று நடிகைவுடன் நடிக்க இருக்கிறார்.

இவர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்ததால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தா.ர் பிறகு இவர் நடிப்பில் கடைசியாக ஹாஸ்டல் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்பொழுது இவர் ஆக்சிஜன்,நிஜமெல்லாம் காதல், ஜாக், ரெட் ரம் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இவர் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தினை இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கவுள்ளார்.

Ashok selvan
Ashok selvan

மேலும் சி.எஸ். கார்த்திகேயன் கமலஹாசனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்க உள்ள திரைப்படத்தில்தான் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்தத் திரைப்படத்தில் மேகா ஆகாஷ், மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் மற்றும் தெலுங்கு நடிகை சவுத்ரி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படம் பள்ளி வாழ்க்கையை வைத்தும் அதன் பிறகு கல்லூரி வாழ்க்கையை வைத்தோம் காமெடி திரைப்படமாக உருவாக இருக்கிறது.