சிவகார்த்திகேயனை தொடர்ந்து பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் ஆர்யா – அதிர்ந்துப்போன உலகநாயகன் கமல்.

arya-and-kamal-
arya-and-kamal-

சினிமா உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்த பிறகு நடிகர்கள் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி அஜித் விஜய் சூர்யா போன்றவர்கள் ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது சம்பளத்தை உயர்த்துவார்கள் அப்படிதான்.

தற்போது சிவகார்த்திகேயனும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார் டாக்டர் திரைப்படத்திற்கு முன்பு 10 கோடி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய பிறகு 10 கோடி சம்பளத்தை உயர்த்தி ஒரு படத்திற்கு  20 கோடி  சம்பளம் வாங்குகிறார் சிவகார்த்திகேயன். அவரை தொடர்ந்து நடிகர் ஆர்யா தற்போது தனது சம்பளத்தை ஓரளவு உயர்த்தி உள்ளார்.

ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆர்யா 2021 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது இந்த படம் 80 காலகட்டங்களில் நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது இந்த படத்தின் ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படியும் இருந்ததால் இந்த படம் வெளியாகி நல்லதொரு வெற்றியை பெற்ற பிறகு தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார் ஆர்யா.

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.இது  குறித்து விலாவாரியாக பார்ப்போம். முத்தையா இயக்கத்தில் கமல் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமலஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.

ஒருவழியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தை முடித்து விட்டு சிறிது இடைவெளி எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியது அப்படி பார்க்கையில் முத்தையா உடன் கமல் நடிக்க போவதில்லை மாறாக படத்தை தயாரிக்க இருக்கிறார் முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் கமலுக்கு பதிலாக ஆர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஆர்யா 15 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் இதற்கு முன்பாக 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் 15 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என கூறினார் இதனால் அதிர்ச்சி அடைந்த பின் ஒரு வழியாக ஓகே சொல்லு உள்ளாராம் கமல்.