போலிஸ் கிட்ட போன தற்கொலை செய்துகொள்வேன் மிரட்டும் ஆர்யா.! பதற்றத்தில் ஜெர்மனி பெண்.!

aarya
aarya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா ஜெர்மனி பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக 80 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அந்த பெண் ஆர்யாவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்தப் பெண் இலங்கையை சேர்ந்தவர் ஆவார். ஆனால் ஜெர்மனியில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். விட்ஜா இவர் இணையதளத்தின் வழியாக லாக் டவுன் நேரத்தில் ஆர்யாவிடம் பணம் இல்லாததால் என்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி 80 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு  தற்பொழுது ஏமாற்றிவிட்டார் என பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் ஆகியோர்களிடம் புகார் அளித்துள்ளார்.

விட்ஜா இதுவரையிலும் என்னிடம் ஆர்யா 70 லட்சத்து 4000 ரூபாய் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு சில நாட்கள் கழித்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பணத்தையும் தர மறுக்கிறார் எனவும் கூறிவுள்ளார். மேலும் பணத்தை மீண்டும் கேட்பதற்கு ஆர்யாவின் தாயாரும் தகாத வார்த்தையில் திட்டி வருவதாக கூறி உள்ளார்.

தற்பொழுது ஆர்யா தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகவும் விட்ஜா கூறியுள்ளார். என்னதான் மிரட்டினாலும் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். எனக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி கூறியது சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து ஆர்யா நேரடியாக ஏதாவது பதில் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.