தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஆர்யா இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்ட பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூலை செய்து சாதனை படைத்தது.
மேலும் நடிகர் ஆர்யா சமீபகாலமாகவே பொதுவாக திகில் திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் அரண்மனை 3 ஆகிய அனைத்து திரைப்படங்களும் ஏ ஆர்யா நடிப்பில் வெளியான திகில் திரைப்படங்கள் ஆக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா கேப்டன் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக கேப்டன் என்றால் விஜயகாந்தை தான் குறிக்கும் ஆனால் ஈசிஆர் ரோட்டில் தினமும் 50 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவாராம் அப்படி அவருடன் சைக்கிள் ஓட்டும் நபர்களுக்கு நடிகர் ஆர்யா தான் தலைவர் இதனால் அவரை கேப்டன் என்று கூறுவார்கள்.
பொதுவாக நடிகர் ஆர்யாவுக்கு சைக்கிள் ஓட்டுவதில் மிக அதிக அளவு ஆர்வம் அந்த வகையில் பல்வேறு சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் ஆர்யா கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைபடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி சிம்ரன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்
ஆர்யா நடித்த டெடி திரைப்பட குழுவினருடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து ஆர்யா இதுபோன்ற திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்க்கு காரணம் அரண்மனை டெடி போன்ற திரைப்படம் வெற்றியனதுதான் காரணம் என பலரும் கூறி வருகிறார்கள்.