தொடர் வெற்றியின் காரணமாக தொடமுடியாத அளவிற்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் ஆர்யா..!

arya-1

சினிமாவைப் பொருத்தவரை தியேட்டரில் ஒரு திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டு கொடுத்துவிட்டால் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் தன்னுடைய சம்பளத்தை ஏற்றுவது வழக்கம் தான் ஆனால் தற்போது இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்து விட்டாலே தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்த திரைப்படம்தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டுமே இணையத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் மூலமாக  ஓடிடி தளங்களும் நல்ல லாபத்தை சம்பாதித்து உள்ளது இந்நிலையில் இதை அறிந்த ஆர்யா சும்மா இருப்பாரா உடனே தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் தயாரிப்பாளர்கள் என்னதான்  ஓடிடி தளத்தில் வெற்றி  பெற்றாலும் தியேட்டரில் ஒரு படமாவது வெற்றி பெற்றால் தான் சம்பளத்தை உயர்த்த முடியும் என்று அரசல்புரசலாக பேசி வருகிறார்களாம். ஆனால் அதெல்லாம் எனக்கு தெரியாது என ஆர்யா தன்னுடைய சம்பளம் உயர்த்துவதில் குறியாக இருக்கிறாராம்.

இதனால் எந்த தவறும் கிடையாது என தயாரிப்பாளரிடம் பேசிய ஆர்யா முன்பு 10 கோடி வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கினேன் தற்போது எனக்கு 20 கோடி வரை சம்பளம் வேண்டும் என கண்டித்து கூறியுள்ளாராம் இதனால் தயாரிப்பாளர்கள் விழிபிதுங்கி உள்ளார்கள்.

sarpatta parambarai
sarpatta parambarai