நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கிய ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து ஓரம்போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்குபுக்கு வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் என 25 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதல் வயப்பட்டு 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள், இப்படி இருக்கும் நிலையில் ஆர்யாவின் தம்பி யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆர்யாவின் தம்பி சத்தியா 2008ஆம் ஆண்டு காதல் டூ கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார் அதன் பின்பு அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார், ஆரம்பகாலத்தில் ஆர்யா திருமணம் செய்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார், அதனால் இவரின் தம்பி சத்யாவிற்கு முதலில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள் ஆர்யாவின் குடும்பத்தினர் அதன்படி திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆர்யாவின் தம்பி சத்யா தான் நீண்ட நாட்களாக காதலித்த பாவனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து வந்துள்ளார்,
இந்த நிலையில் ஆர்யாவின் தம்பி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.