தனது சகோதரிகளுடன் நடிகர் அருண்விஜய்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

arun vijay sister
arun vijay sister

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் அருண்விஜய் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக வெகுநாளாக சினிமா பக்கம் முகம் காட்டாமல் இருந்து வந்தார்.

இதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த அருண்விஜய் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து  தமிழில் தடம் குற்றம் 23 போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

நடிகர் அருண்விஜய் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருக்கு நான்கு சகோதரிகள் உள்ளார்கள் என்பது மட்டுமின்றி அவர்களும் சினிமாவில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

தற்போது இவருடைய குடும்பம் பிரிந்து இருந்தாலும் இவர்கள்  ஒரு நேரத்தில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் இன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் நடிகர் அருண் விஜய் உடன் அவர்களுடைய சகோதரிகள் ஸ்ரீதேவி ப்ரீத்தா கவிதா வனிதா என ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

arun vijay sister
arun vijay sister