அப்பா, மகள் பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் அன்பிற்கினியாள் திரைப்படத்தின் ட்ரெய்லர்!! அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் வேற லெவல் ..வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண்பாண்டியன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அவரை தொடர்ந்து அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு ஹெலன் என்ற பெயரில் வெளியானது.

இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் அன்பிற்க்கினியால் என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி நடித்துள்ளனர். நடிகர் அருண் பாண்டியன் எப்படியாவது தனது மகளை ஒரு சிறந்த நடிகையாக ஆக்கிவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு  அன்பிற்கினியாள் திரைப்படத்தில் அருண்பாண்டியன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.