நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த கிசுகிசுப்புகள் தொடர்ந்து சமூக வலைதளங்களின் மூலம் தினமும் வெளியாகி வருகிறது. அதாவது அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்ப்பதாக கூறப்பட்டது.
அதன் பிறகு விக்னேஷ் சிவன் எழுதிய கதை சொல்லும் அளவிற்கு இல்லை என்பதால் லைக்கா நிறுவனம் மற்றும் அஜித் இணைந்து விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கினார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தினை இயக்குகிறார் எனவும் படக்குழுவினர் சென்னை புறநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் முன் தயாரிப்பு வேலைகளில் முப்புரமாக ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
எனவே தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் முக்கிய வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் அருண் விஜய் இயக்குனர் பாலாவுடன் வணங்கான் திரைப்படத்தில் கைக்கோர்த்துள்ளார். அதாவது பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் படம் உருவான நிலையில் பிறகு இந்த படத்திலிருந்து சூர்யா வெளியேறினார் எனவே சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இந்த காரணத்தினால் ஏகே 62 திரைப்படத்தில் அருண் விஜய் விலகினாராம். மேலும் மகிழ் திருமேனி நடிகர் ஆர்யாவை அணுகியுள்ளார் இதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் ஆர்யாவும், அஜித்தும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஆரியாவிடம் கேட்ட நிலையில் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து சார்ப்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடிக்க இருக்கும் நிலையில் எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. எனவே ஏகே 62 படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.