நடிகர் அருண் விஜய் 17 வயதிலேயே ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் ஆனால் அப்பொழுது கதைகளத்தை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காததால் தோல்வி படங்களை கொடுத்தார் இதிலிருந்து மீண்டு வர அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோ, வில்லனாக நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த யானை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகிய அவர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் தனது மனைவி குறித்து அருண் விஜய் பேசிய உள்ளார் அது குறித்து விடாவாரியாக தற்போது பார்ப்போம்.
தனது மனைவி பார் பிட்டால் போல இருக்க வேண்டும் அதே சமயம் சிம்ரன் போல உயரமாகவும், உதட்டிற்கு கீழ் மச்சம் இருக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதாக அருண் விஜய் கூறினார். முதல்முறையாக எனது மனைவி ஆர்த்தியை சந்திக்கும் போது எவ்வளவு பெரிய ஹில்ஸ் போன்ற என கேட்டேன்.
உடனே அவர் செருப்பை கழட்டி இந்தாங்க நீங்களே பாருங்க காட்டினார். என்னுடைய மனைவியின் உயரத்திற்கும், செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. மேலும் எனது மனைவி கொஞ்சம் சூடான நபர் என பேட்டி ஒன்றில் மனைவியைப் பற்றி பேசி அசத்தினார் நடிகர் அருண் விஜய்.