அருண் விஜய் பட நடிகையின் புகைபடத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!

vidya
vidya

Actress Vidhya Pradeep new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வித்யா பிரதீப். இவர் 2014 ஆம் ஆண்டு சைவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து அவர் பசங்க2, ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, களரி, அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்தை, மாரி 2 போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். வித்யா பிரதீப் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக நடித்த படம் தடம் ஹிட்டடித்தது இப்படத்தில் மலர்விழி என்ற போலீஸ் கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி சினிமா வட்டாரங்களில் மனதை கொள்ளையடித்த வித்யா பிரதீப். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வித்யா பிரதீப்  தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என கூறிவருகின்றனர். ஏனென்றால் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் கலக்குகிறார் என கூறி வருகின்றனர்.

வித்யா பிரதீப் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாயகி என்ற சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அம்மணி தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் தடம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் இப்படி கவர்ச்சியாக உள்ளாரா என அதிர்ச்சியில் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

vidya-pradeep
vidya-pradeep