விஜய் சேதுபதி ரூட்டை பின்பற்ற துடிக்கும் நடிகர் அருண் விஜய் .? வெற்றி பெறுவாரா..

arun-vijay-and-vijay-sethupathy
arun-vijay-and-vijay-sethupathy

இளம்வயதிலேயே ஹீரோவாக நடித்து தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து காணாமல் போனவர் நடிகர் அருண் விஜய் ஒரு கட்டத்தில் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் திரை படத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் பயங்கரமாக நடித்துக் சினிமாவுலகில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதன்பின் சினிமா உலகில் இவருக்கு வெற்றிகள் குவிய தொடங்கியது. அருண் விஜயின் குற்றம் 24 படம், மாபியா போன்ற படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது தற்போது கூட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அந்த படங்கள் வெளிவராமல் இருக்கின்றன அந்த வகையில் அக்னி சிறகுகள், பாக்ஸர், பார்டர், யானை போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

முதலாவதாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படம் விரைவில் ரிலீசாக காத்துக்கொண்டிருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கும்  படமாகவும் அதேசமயம் ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என தெரியவருகிறது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பேசிய அருண் விஜய் இனி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் நிறைந்த படங்கள் வந்தால் அதை தவிர்ப்பேன் என்றும் இனி அது அதுபோன்ற படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் உறுதி எடுத்து உள்ளார் மேலும் பேசிய அவர் சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது சினிமா உலகில் நாங்கள் இருவரும்.

நல்ல நண்பர்கள் என கூறி அந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டினார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியது விஜய் சேதுபதி போலவே நானும் ரூட்டை மாற்றி கொள்கிறேன் என சொல்லி விட்டார் ஆம் அவர் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அருண் விஜய் வில்லன் ரோலில் சிறப்பாக நடிக்க கூடிய ஒருவன் குறிப்பாக டாப் ஹீரோ படங்களில் இவர் வில்லனாக நடித்தால் நிச்சயம் அந்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.