தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்தது தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருபவர் விஜயகுமார் இவரை தொடர்ந்து அவரது மகன் மகள்களும் சினிமா உலகில் வெற்றிக் கொடியை நாட்டினர் அதிலும் குறிப்பாக மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பை அள்ளி வருவதோடு ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப் படத்தில் இப்போது நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஆக்சன் அதிரடியில் உருவாகும் படம். யானை திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய் முதல் முறையாக ஹரி உடன் இணைந்து இந்த படம் உருவாகி வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது.
இந்த படத்தை தவிர அருண் விஜய் கையில் அக்னி சிறகுகள், பார்டர், சீனம் போன்ற பல்வேறு திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் யானை படத்தின் படப்பிடிப்பில் சூட்டிங் நேரம் போக படக்குழுவிற்கு சமைத்து கொடுப்பதை நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.
அதில் அவர் கூறி உள்ளது நேற்று இரவு படப்பிடிப்பின் போது என் பட குழுவினர்களுக்கு சமைப்பது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு இடம் கொடுத்தா அன்பான குடும்பத்திற்கு நன்றி அவர்கள் தங்கள் அன்பில் மிகவும் பணக்காரராகவும் பெருந்தன்மை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் நாம் யார் நாம் என்ன என்பது முக்கியமல்ல நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நாம் ஒவ்வொரும் ஒருவர் பரப்பும் கருணையும் அன்பும் தான் அன்பை பரப்புங்கள் இந்த அன்பு உள்ளங்கள் அனைத்தும் கடவுள் ஆசீர்வதிப்பாராக என்று தெரிவித்தார். சினிமா உலகம் மாறுகிறது போல நடிகர்-நடிகைகளும் மாறுகின்றன அதேபோல தற்போது இவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருக்கு சமைத்து கொடுப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.