துப்பாக்கி சத்தம் அலறும் அளவிற்கு வெளிவந்த அருண் விஜய்யின் பார்டர் பட டிரைலர்..!

arun-vijay-1
arun-vijay-1

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில்  சொதப்பலான திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின்னர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி re-entry கொடுத்தவர்தான் நடிகர் அருண்விஜய்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக அதன் பின்னர் இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியையும் பெற்று தருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய மாமாவான பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலமாக உருவான ஓ மை டாக் என்ற திரைப்படம் மிக விரைவாக இணையத்தில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தன்னுடைய வெற்றி இயக்குனருடன் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

அது வேறு எந்த இயக்குனரும் கிடையாது குற்றம் 23 திரைப்படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் தான் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு பார்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைப்புக்கு ஏற்றார்போல் இத்திரைப்படத்தில் அதிரடி ஆக்சன்கள் நிறைந்த திரைப்படமாக இவை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு இத்திரைப்படத்தின் வழக்கு விசாரணையில் இருக்கும்பொழுது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.