Ramya pandiyan uncle arun pandiyan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் 2015ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இப்படத்தின் மூலம் பல விருதுகளைப் பெற்று சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவர்ந்தார்.
இவர் 1990ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தார். இவர் முதலில் குறும்படம் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பங்குபெற்று தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதற்கிடையில் அவ்வப்போது தனது வலைதளத்தில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில், தற்போது பாண்டியன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்தப் புகைப்படத்தில் இருந்தது வேறு யாருமல்ல பிரபல நடிகரான அருண்பாண்டியன் தான். அவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்களுக்கு சித்தப்பா என்பதை உணர்ந்த ரசிகர்கள் ஆட்டம் கண்டு போயுள்ளனர்.90 காலகட்டங்களில் அருண் பாண்டியன் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு படங்களை தயாரித்து வெளியிடுவதில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
ரம்யா பாண்டியன் சிறந்த கதைகளை இருந்து எடுத்து அதில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் சரியான பட வாய்ப்பு கிடைக்காத நிலையை ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் அவர்கள் அப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவ்வகையில் சமீபத்தில் மாடியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.