59 வயதிலும் இளம் நடிகர்களுக்கு இணையாக உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் நடிகர் அர்ஜுன்.! புகைப்படத்தை பார்த்து மிரலும் இளசுகள்.

arjun
arjun

ஒருகாலத்தில் சினிமாவில் நடிப்புத் திறமை இருந்தால் போதும் வாய்ப்பு கிடைத்து விடும் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதனை வைத்து தங்களுடைய நடிப்பால் அடுத்தடுத்து பட வாய்ப்பை ஈசியாக அடைந்து விடுவார்கள். ஆனால் சமீபகாலமாக என்னதான் நடிப்பு திறமை இருந்தாலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டு இருந்தால் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர முடியும் அதனால் இயக்குனர்களும் உடலை கட்டுக்கோப்புடன் இருக்கும் நடிகர்களையே தேடி செல்கிறார்கள்.

அந்த வகையில் இளம் நடிகர்கள் பலரும்சமீபகாலமாக உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை ஆக்ஷன் காட்சிகள் மூலம் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக் கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை அர்ஜுன் என்பதைவிட ஆக்சன் கிங் அர்ஜுன் என்றால்தான் பலருக்கும் தெரியும்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹீரோ இரும்புத்திரை ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அர்ஜுன் தேசப்பற்றுள்ள திரைப் படத்தை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இந்தநிலையில் அர்ஜுன் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சர்வையர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் அர்ஜுன் நடிப்பில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதேபோல் நடிகர் அர்ஜுன் தன்னுடைய இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள தவறி விடுவார்கள் ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது இவருக்கு 59 வயது ஆகும் இருந்தாலும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள்தான் ரியல் இன்ஸ்பிரேஷன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

arjun
arjun

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

arjun
arjun