தனது மகள் வயது இருக்கும் நடிகையுடன் ஜோடி போடும் அர்ஜுன்..! ஐயோ அந்த அம்மா வாயில வண்ட வண்டையால்ல வரும்..!

arjun-1

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என கொண்டாடப்படும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் அர்ஜுன் தான் இவர் எண்பதுகளில் மிகப் பிரபலமான நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய திறமையை மூலம் மட்டுமே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக  வளர்ந்துள்ளார்.

இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு, மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார். அதன் பிறகு சினிமாவில் அறிமுகமான நடிகை நீதானே அவன் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

அதன்பின்னர் அட்டகத்தி ரம்மி திருடன் போலீஸ் காக்காமுட்டை ஹலோ நான் பேய் பேசுகிறேன், கட்டப்பாவ காணோம் வடசென்னை கானா  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை வடசென்னை திரைப்படத்தில் பேசும் கெட்ட வார்த்தைகளை பார்த்து ரசிகர்கள் என்றும் மிரண்டு போய் விட்டார்கள்.

மேலும் நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் இந்நிலையில் தற்போது தினேஷ் லக்ஷ்மணன் இயக்கவுள்ள திரைப்படத்தில் தான் அர்ஜுனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் நடிகர் அர்ஜுன் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் ஆகவும்  நடிக்க உள்ளார். இன் நிலையில் இத்திரைப்படத்தின் பூஜை முடிவடைந்து படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

aishwariya rajesh-1
aishwariya rajesh-1

பொதுவாக அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தில் ஆக்சன் ஆக தான் இருக்கும் ஆனால் இத்திரைப்படத்தில் புத்திசாலித்தனமாக நடிப்பதாக  கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது ஆகையால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.