ஹீரோவாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்த நிலையில் தற்பொழுது வில்லன் அவதாரம் அடுத்து படங்களில் நடித்து வருபவர் தான் அர்ஜூன் அந்த வகையில் தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் லியோ படத்தில் அவரது கெட்டப் குறித்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இவ்வாறு இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் ரசிகர்கள் ஆக்சன் கிங் அர்ஜுன் என அழைத்து வருகிறார்கள். இவ்வாறு அர்ஜுனனின் மூத்த மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா.
இவர் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் பெரிதாக இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரீச்னை பெறாத நிலையில் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.
ஆனால் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அர்ஜுன் பிரபல காமெடி நடிகருக்கு சம்மந்தியாக இருக்கும் நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது காமெடி, குணசத்திரம் என ஏராளமான கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர்தான் தம்பி ராமையா. மைனா திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் மிகப்பெரிய ரீச்சினை பெற்றது இவ்வாறு இவருடைய மகன் உமாபதி சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை உமாபதி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய முக்கியமான நிகழ்ச்சி தான் சர்வ்வைவர் இந்நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் உமாபதி பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இதன் மூலம் அர்ஜுன் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுடன் உமாபதி நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் காதலிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் தற்பொழுது இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர்களும் சம்மதித்திருக்கிறார்களாம் அந்த வகையில் விரைவில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற இருக்கிறது.