பீச்சில் வைத்து மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஆரி – பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

aari and wife
aari and wife

சினிமாவுலகில் நடிக்கின்ற ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் இருக்கும் ஆசை எப்பொழுது நாம் உச்ச நட்சத்திரமாக மாறுவோம் என்பதுதான் அந்த வகையில் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடையாமல் இன்னும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை முடியாமல் தமிழ் சினிமாவில் தட்டுத்தடுமாறி வருவர்தான் நடிகர் ஆரி.

தமிழ் சினிமாவில் இதுவரை நெடுஞ்சாலை, மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்ததால் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 -ல் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

பிக்பாஸ் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இதற்கு முன் பயணித்த பிரபலங்களை சந்தித்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தார் மேலும் நேர்மையாகவும் பயணித்ததால் ஒரு கட்டத்தில் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர் அதன் காரணமாக ஆரி டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். வெளியே வந்த அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது தற்போது இவரது கையில் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், மௌன வலை, அலேக்காஆகிய படங்கள் தன் வசம் வைத்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது மனைவியை பீச் பக்கம் அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் அவரது வெட்டிங் டே முன்னிட்டு கடற்கரை ஓரத்தில் அவருக்கு மோதிரம் அணிவித்து தனது மனைவியை சந்தோஷப்படுத்திய உள்ளார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.