தமிழ் சினிமாவில் பெருமாளவு பெண் ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது அரவிந்த்சாமி தான் இவர் சாக்லேட் பாய் என்ற பட்டத்துடன் வலம் வந்தது மட்டுமில்லாமல் இவரை பார்த்து பல நடிகர்களும் பொறாமைப்படும் அளவிற்கு அழகுடையவர்.
இவ்வாறு ஆரம்பத்தில் இவர் அடுக்கடுக்காக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் திடீரென சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு அமைதி காத்து வந்தார்.
பின்னர் திடீரென்று ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டி விட்டார் அந்தவகையில் நெகட்டிவ் ரோலில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவை விட வில்லனுக்கு தான் அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் நீங்கள் எங்கள் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என அரவிந்த் சாமியிடம் கெஞ்சிக் கொண்டே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமி தன்னுடைய சம்பள விஷயத்தில் கொஞ்சம் முரண்டு பிடிப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பாக மாபெரும் வெற்றிபெற்ற சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் இரண்டாம் பாகம் விடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்பட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி சம்பள பாக்கி இருந்ததன் காரணமாக டப்பிங் பேச மறுத்ததன் காரணமாக அந்த படம் கிடப்பில் கிடக்கிறது.
அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர் அந்த பாக்கி சம்பளத்தை கொடுத்து விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்த நிலையில் அரவிந்த்சாமி தன்னுடைய சம்பள பாக்கியை வட்டியும் முதலுமாக கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறு அரவிந்த்சாமி பேசியதன் காரணமாக தயாரிப்பாளர் என்ன செய்வது என்று புரியாமல் அல்லாடி வருகிறார்.