இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் என்று தெரிகிறதா.? அதுவும் மிரட்டலான வில்லன் நடிகர்.!

aravind sami
aravind sami

ரஜினி நடிப்பில் வெளியாகிய தளபதி திரைப்படத்தில் தம்பியாக நடித்து பிரபலமடைந்த அதன்பிறகு ரோஜா என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து பிலிம்பேர் விருதை தட்டிச் சென்றவர் அரவிந்த்சாமி.

ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்க சென்றால் அரவிந்த்சாமி போல் இருக்க வேண்டும் என பல பெண்களும் ஆசைப்படுவார்கள் அந்த அளவு அரவிந்த்சாமி மிகவும் பிரபலம்.

அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகிய பாம்பே திரைப்படத்தில் உள்ள காட்சிகளும் பாடல்களும் இன்னும் நம்மளை விட்டு போகவில்லை அந்த அளவு மிகவும் பிரபலமாகிவிட்டது. அரவிந்த்சாமி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார்.

5 வருடத்திற்கு பிறகு தனி ஒருவன் திரைப்படம் அரவிந்த்சாமி அவர்களுக்கு மிகப்பெரிய ரீ என்ட்ரியை கொடுத்தது. தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து மிரட்டினார் அதன்பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல்,  செக்கச்சிவந்த வானம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

இந்த நிலையில் 2021ல் வெளியாக இருக்கும் கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2 வணங்காமுடி,  நரகாசுரன்,  தலைவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக நடித்துள்ளார்.

அதற்காக அரவிந்த்சாமி மேக்கப் போடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்து அரவிந்த்சாமியா என உயர்ந்து பார்க்கிறார்கள் ரசிகர்கள்.