90 காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர் ரசிகர்கள் என்ற அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் வில்லனாக நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் அனைத்து திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார்.
இவர் வில்லனாக நடித்து வந்த காலகட்டத்தில் இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் அனைத்து இயக்குனர்களும் தங்கள் படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் ஆனந்தராஜை நடிக்க வைத்து விடுவார்களாம். அந்தவகையில் இவரும் 90 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீகில் திரைப்படத்தில் காமெடி நடிகராக ஒரு காட்சியில் நடிக்க வைத்திருப்பார் அதன்பிறகு ஆனந்தராஜ் பெரும்பாலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்.
இப்படிப்பட்ட நிலையில் ஆனந்தராஜ் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா, இந்திரன் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இந்த திரைப்படத்தை இதுவரையிலும் யாராலும் மறக்க முடியாது இந்த திரைப்படத்தை பாராட்டாதவர்கள் என்று எவரும் இல்லை. இந்த திரைப்படம் தான் இவருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அந்தவகையில் ஆனந்தராஜ் பாட்ஷா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான தகவலை சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாட்ஷா திரைப்படத்தில் முதலில் தயாரிப்பாளர் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது அதில் நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆனந்தராஜ் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினாராம்.
பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது நடிகர் ரஜினியை அடிக்கும் ஒரு காட்சி இருக்கிறது என்று கூறியதும் முதலில் ஆனந்தராஜ் கொஞ்சம் பயந்தாராம். அதன் பிறகு ரஜினிகாந்த் ஆனந்தராஜை பயப்படாம நடியுங்கள் என்று கூறியதும் அந்த திரைப்படத்தில் சண்டை காட்சியில் ரஜினியை அடிப்பது போல் நடித்தாராம்.
அதனைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டதால் நெருங்கிய நண்பர்களாக ஆனார்களாம் அதன் பிறகுதான் இந்திரன் திரைப்படத்திலும் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.