திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இவ்வாறு அல்லு அர்ஜுன் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடன கலைஞர்கள் மற்றும் இயக்குனர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர்.
மேலும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் வில்லு சாமி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இவர் 2001ஆம் ஆண்டு டாடி என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து பிறகு தற்போது வரையிலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது எனவே இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை புஷ்பா என தான் அழைத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு குழந்தைகளும் இருக்கும் நிலையில் தற்பொழுது சினேகா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு சினேகா ரெட்டியின் ஏராளமான அழகிய புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் லைக்குகளும் கமெண்டுகளையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்கள் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புஷ்பா பொண்டாட்டி அம்சமாக இருக்காங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ சினேகா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள்.