நடிகர் அஜித்தின் மொத்த “சொத்து மதிப்பு” இத்தனை கோடியா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்

ajith
ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ அஜித்குமார் இவர் அண்மைகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக வெளியான துணிவு படமும் சமூக கரை கடந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் மாஸ் என பலரும் கூறி வந்த நிலையில் துணிவு திரைப்படம் அதை முறியடித்தது. பிற மாநிலங்கள், வெளிநாடு என பல்வேறு இடங்களில் துணிவு  படம் வசூலில் சக்க போடு போட்டது ஒட்டுமொத்தமாக துணிவு திரைப்படம் மட்டுமே சுமார் 210 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 62 வது திரைப்படத்தில் நடிகர் உள்ளார். மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சமீபத்தில் ஏகே 62 படக்குழு அஜித் இல்லாமலேயே பூஜையை வெற்றிகரமாக போட்டு முடித்து இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

நாம் அண்மைக்காலமாக டாப் நடிகர், நடிகைகள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.. அதன்படி நடிகர் அஜித்குமார் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. நடிகர் அஜித் குமாரிடம் பல சொகுசு கார்கள், பிஎம்டபிள்யூ போன்ற பல சொகுசு பைக்குகள் நிறைய இருக்கின்றன.

மேலும் சென்னையிலேயே பல்வேறு இடங்களில் அவருக்கு வீடுகள் இடங்கள் இருக்கிறது. நடிகர் அஜித்குமார் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் ஒட்டுமொத்தமாக அஜித்தின் சொத்து மதிப்பு சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதியான தகவல் இல்லை