தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் விறுவிறுப்பாக தன்னுடைய திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்தின் உதவியாளரும் மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திராவின் உதவியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதன் காரணத்தினால் கோபம் அடைந்த செய்தி வாசிப்பாளர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கம் முன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர் இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.நேற்று பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த படத்தில் ஏராளமான கலைஞர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பியத்திருந்தார்கள்
.மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவிற்கு பொதுமக்கள் வந்து இலவசமாக கண்டு கழிக்கலாம் என கூறப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள் மேலும் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு வருகை தந்திருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது மறுபுறம் பவுன்சர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அதிக அளவில் குவிந்திருந்தார்கள்.
இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பிஆர்ஓ உதவியாளர் விக்கி என்பவரை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது இப்படிப்பட்ட நிலையில் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் நடிகர் அஜித்தின் உதவியாளரும் மக்கள் தொடர்பான சுரேஷந்திராவின் உதவியாளர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியதால் கோபமடைந்த செய்தியாளர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு போலீசார்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி அவர்களுடைய பணியில் ஈடுபட வைத்தார்கள் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.