நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று உடல்நிலை குறைவால் காலமானார் இந்த தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 84. உடல்நிலை குறைவு காரணமாக இன்று அதிகாலை 4:30 மணி அளவில் காலமாகியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில இருந்து வந்துள்ளார் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் குழுவினர்கள் இணைந்து அவரை கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உயிரிழந்திருப்பது திரைத் துறையினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய உடல் இன்று காலை அதாவது 9:30 மணி அளவில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ajith father
ajith father

இந்நிலையில் திரைத் பிரபலங்கள், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக தற்பொழுது ஈச்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9:30 மணி அளவில் இந்து முறைப்படியான சரியான சடங்குகள் செய்யப்பட்டு பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடிகர் அஜித்தின் தந்தை காலமாகி இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.