தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய நகைச்சுவை திறமையால் பல திரைப்படங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்து வருகிறார்.
முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் துணை நடிகராக நடித்து மக்களை சிரிக்க வைத்த மயில்சாமி சமீபகாலமாக சோலோவாக எல்கேஜி திரைப்படத்தில் நடித்து கலக்கினார் அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் சோலோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.
இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் மகன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமாவில் பல பிரபலங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் முன்னணி நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் மயில்சாமி மகன் தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் புன்னகை சிரிப்புடன் இருக்கிறார். மேலும் மயில்சாமியின் மகன் அச்சசல் மயில்சாமி போல் இருக்கிறார்.